பழநியில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் ‘புள்ளிங்கோ’ பாய்ஸ் போலீசார் ‘கவனிக்க’ கோரிக்கை

3 months ago 12

 

பழநி, டிச. 9: பழநியில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் புள்ளிங்கோ பாய்ஸை போலீசார் ‘கவனிக்க’ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி நகரில் பெண்களுக்கான மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி, மகளிர் கல்லூரி போன்றவை உள்ளது. தவிர, பழநி நகரைச் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்தவ பெண்கள் மற்றும் மாணவிகள் வேலை மற்றும் கல்விக்கு பழநி நகருக்கே வர வேண்டி உள்ளது. இந்நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பழநி பஸ் நிலையம் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் ரெணகாளியம்மன் கோயில் சாலைகளில் புள்ளிங்கோ மாணவர்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளின் அருகில் அதிக வேகத்தில் பயமுறுத்தும் வகையில் பைக்குகளை ஓட்டிச் செல்வது, நடந்து செல்லும் மாணவிகளை பின் தொடர்வது போன்ற சேட்டைகளில் ஈடுபடுகின்றனர். எனவே, மாணவிகளின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் நிலையம் மற்றும் ரெணகாளியம்மன் கோயில் சாலைகளில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post பழநியில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் ‘புள்ளிங்கோ’ பாய்ஸ் போலீசார் ‘கவனிக்க’ கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article