பழஞ்சூர் பாப்பன்சத்திரத்தில் புதிய தானியங்கி சிக்னல்: எம்எல்ஏ இயக்கி வைத்தார்

4 months ago 11

திருவள்ளூர்: பழஞ்சூர் பாப்பன்சத்திரத்தில் புதிய தானியங்கி சிக்னலை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ இயக்கி வைத்தார். பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பழஞ்சூர், பாப்பான்சத்திர மக்கள் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். அங்கு போக்குவரத்து சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

இதனால் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வின்சென்ட், சாலையை கடக்கும் இடத்தில் ஒரு ஊழியரை அமர்த்தி கடந்த 4 வருடங்களாக ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கி போக்குவரத்தை சீர் செய்து வந்தார். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் வாகனங்கள் சீராக செல்ல அங்கு தானியங்கி சிக்னலை அமைத்தது. இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் தலைமை தாங்கினார். விழாவில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தானியங்கி சிக்னலை இயக்கி வைத்தார். இதில் போக்குவரத்து துணை ஆணையர் அன்பு, உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன், ஆய்வாளர் சந்திரமவுலி, திமுக ஒன்றிய செயலாளர் கமலேஷ், ஊராட்சி துணைத் தலைவர் கன்னியம்மாள் ருத்ரகுமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள், வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழுக்கள், பொதுமக்கள கலந்து கொண்டனர்.

The post பழஞ்சூர் பாப்பன்சத்திரத்தில் புதிய தானியங்கி சிக்னல்: எம்எல்ஏ இயக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article