பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி

2 months ago 13
நாட்டில் உள்ள அனைத்து பழங்குடியின சமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்துவதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை என பிரதமர் மோடி தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் துலேயில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், மகாராஷ்டிராவில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி, சக்கரங்களும் பிரேக்கும் இல்லாத வாகனம் போல் இருப்பதாகத் தெரிவித்தார். கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுவதாகவும், அவர்களுக்கு மக்கள் பணத்தைக் கொள்ளை அடிப்பதுதான் ஒரே நோக்கம் எனவும் மோடி தெரிவித்தார். மதக் குழுக்களுக்கு இடையே மோதலை உருவாக்கி அதன்மூலம் நாட்டைப் பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
Read Entire Article