
பிரேசிலா,
பிரேசில் நாட்டின் ரியோ கிராண்டு டொ சுல் மாகாணம் எஸ்டாகொ நகரில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்திற்குள் நேற்று 16 வயது சிறுவன் கத்தியுடன் புகுந்துள்ளான்.
வகுப்பறைக்குள் புகுந்த அந்த சிறுவன், அங்கு இருந்த ஆசிரியை, மாணவிகள் என 4 பேரை சரமாரியாக குத்தியுள்ளான். இந்த கத்திக்குத்து தாக்குதலில் 9 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
ஆசிரியை உள்பட எஞ்சிய 3 பேர் படுகாயமடைந்த நிலையில் சக ஆசிரியைகள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து வந்து தாக்குதல் நடத்திய 16 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். கத்திக்குத்து தாக்குதலுக்கான காரணம் குறித்து சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.