பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியத்தில், ரூ1.30 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேற்று திறந்துவைத்தார். திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ரூ1.30 கோடி மதிப்பீட்டில், திருமலராஜூபேட்டை, சாமந்தவாடா, பான்றவேடு ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்கள், சூராஜூப்பட்டடை, ராமச்சந்திராபுரம் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், கரிம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் கலையரங்கம், ரங்கைய்யப் பள்ளியில் புதிய நியாவிலைக்கடை கட்டிடம் ஆகிய கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ பங்கேற்று, புதிய கட்டிடங்களை திறந்துவைத்து பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை பட்டியலிட்டார். இதில், பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அற்புதராஜ், மெல்கி ராஜாசிங், ஒன்றிய பொறியாளர் சாவித்திரி, பணி மேற்பார்வையாளர் நாகராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தான்யா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவீந்திரநாத், பேரூராட்சி திமுக செயலாளர் செந்தில்குமார், பள்ளிப்பட்டு பேரூராட்சி தலைவர் மணிமேகலை, பேரூராட்சி கவுன்சிலர்கள் கபிலா சிரஞ்சிவி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலீல், ஒன்றிய நிர்வாகிகள் திருமலை லோகநாதன், செங்கய்யா, கொளத்தூர் பாபு, கரிம்பேடு குமார், சந்துரு, கிளைச் செயலாளர்கள் மீசை வெங்கடேசன், ரவி, சோமு, சங்கர், சந்திரன், தருமன், ஜெகதீசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, பள்ளிப்பட்டு பேரூராட்சியுடன் சூராஜூபட்டடை மற்றும் ராமச்சந்திராபுரம் ஆகிய ஊராட்சிகள் இணைப்பு அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, சூராஜூபட்டடை கிராம பெண்கள் எஸ்.சந்திரன் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ, அதனை அரசின் பார்வைக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
The post பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ரூ1.30 கோடியில் புதிய கட்டிடங்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.