சென்னை: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் இருந்த நிலையில், எல்லை மாநிலமான பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்காக சென்று, அங்கு சிக்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த 15 மாணவ, மாணவிகள், தமிழ்நாடு அரசு உதவியுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் டெல்லி வரவழைக்கபட்டு, அங்கிருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் மாணவ, மாணவிகளை, அமைச்சர் நாசர், அயலகத் தமிழர் நலத்துறை அதிகாரிகள், வரவேற்று தனி வாகனம் மூலம், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். விமான நிலையத்தில் மாணவ, மாணவிகள் பேட்டியளிக்கையில், ‘‘நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில், போர் நடந்ததால், எங்களுக்கு மிகுந்த அச்சம் ஏற்பட்டது. பதற்றமான அந்த சூழ்நிலையில், நமது ராணுவத்தினர் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் உதவினர். அவர்களின் உதவி எண்ணை தொடர்பு கொண்டு, அதன்மூலம் பத்திரமாக தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்திருக்கிறோம்’’ என்றனர்.
The post பஞ்சாபில் சிக்கித் தவித்த 12 தமிழக மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினர் appeared first on Dinakaran.