பள்ளிக்கல்வித்துறையில் 34 தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓ ஆக பதவி உயர்வு

2 hours ago 1

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 34 பேருக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவு: பள்ளிக் கல்வித்துறையில் 2025-26ம் ஆண்டுக்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் மூலம் நிரப்ப வேண்டிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அரசால் ஏற்பளிக்கப்பட்ட தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் 34 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும் மற்றும் பணி மாறுதல் வழங்கியும் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. அதன்படி 34 தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதன்படி, சிவகங்கை மாவட்டம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல் தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலராகவும், தென்காசி மாவட்டம், வட கரை அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், தென்காசி மாவட்ட கல்வி அலுவலராகவும், திருவாரூர் மாவட்டம் மழவராயநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாவித்திரி திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலராகவும், திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக நாதன் தேனி மாவட்டத்துக்கும், தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் புதுக்கோட்டை மாவட்டத்துக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் காரப்பிடாகை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேசன் சிவகங்கை மாவட்டத்துக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, விருதுநகர் மாவட்டத்துக்கும், தேனி மாவட்டம் சங்கராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுருளிவேல் ஒட்டன்சத்திரம் மாவட்ட கல்வி அலுவலராகவும், செங்கல்பட்டு மாவட்டம் திருவாஞ்சேரி அருசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பா சென்னை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கக மாவட்ட கல்வி அலுவலராகவும், தூத்துக்குடி மாவட்டம் சுண்டங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மரிய ஜான்பிரிட்டோ, கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலராகவும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன்- சென்னை ைசதாப்பேட்டை மாவட்ட கல்வி அலுவராகவும், கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஷ்ணுமூர்த்தி- கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலராகவும், ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கனகராணி-திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலராகவும், நாமக்கல் மாவட்டம் ஆர்.பட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி-சேலம் மாவட்ட கல்வி அலுவலராகவும், இவர்கள் உள்பட 34 தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் பெற்ற தலைமை ஆசிரியர்கள் தனது பணியிடப் பொறுப்புகளை அப்பள்ளியின் மூத்த முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 

The post பள்ளிக்கல்வித்துறையில் 34 தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓ ஆக பதவி உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article