பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு? - வெளியான தகவல்

5 hours ago 3


தமிழகத்தில் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்புகளுக்கு 12ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. அதேபோல், 4,5ம் வகுப்புகளுக்கு 18ம் தேதியும், 6 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு 25ம் தேதியும் கோடை விடுமுறை தொடங்குகிறது.

இந்நிலையில், கோடை வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கான விடுமுறை காலம் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மந்திரி அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு பதில் அளித்த அன்பில் மகேஷ், பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆய்வு செய்யும் காலநிலை மேலாண்மை குழு பரிந்துரை அளிக்கும். அதன் அடிப்படையில் பள்ளிகள் ஜூன் மாதத்தில் எந்த தேதியில் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கோடை விடுமுறை நீட்டிப்பு குறித்தும் முடிவு எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

Read Entire Article