பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம்

3 months ago 25
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பள்ளி விடுமுறையை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 11 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டனர். மாருதி நகர் பகுதியை சேர்ந்த கரீம் தனது நண்பர்கள் 2 பேருடன் ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ஆழமான பகுதியில் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. சிறுவர்களின் சத்தம் கேட்டு சென்ற அப்பகுதியினர் இருவரை மீட்ட நிலையில் கரீம் நீருக்குள் மூழ்கியதாக தெரிவித்தனர்.  
Read Entire Article