பள்ளி விடுதியில் மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர் கைது

1 week ago 7

திருச்சி,

திருச்சி சமயபுரம் அருகே உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி அருகே மாணவர்களுக்கான விடுதி இயங்கி வருகிறது. இங்கு 110 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகிறார்கள். இந்த விடுதியில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் குழந்தைநாதன் (வயது 48) என்பவர் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் (40) என்பவர் திருச்சியில் உள்ள தனியார் கிறிஸ்தவ கல்லூரியில் பாதிரியாருக்கான படிப்பை படித்து வருகிறார்.

இந்த நிலையில் விடுமுறை நாட்களில் விடுதிக்கு வரும் சுந்தர்ராஜன், பள்ளி மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் விடுதி வார்டனிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பள்ளி விடுதி மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக சுந்தர்ராஜன் மற்றும் நடவடிக்கை எடுக்காத பாதிரியார் குழந்தைநாதன் ஆகியோரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டு உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read Entire Article