ராமநாதபுரம்,பிப்.17: கமுதியில் தனியார் பள்ளி வாகனத்தின் கண்ணாடியை உடைத்த 3 பேர் மீது வழக்கு பதிந்து, இருவரை போலீசார் கைது செய்தனர். கமுதி கோட்டைமேட்டைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கோபித்துரை(21). இவர், தனியார் பள்ளி வாகனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளையாபுரம் கிராமத்தில் பள்ளி குழந்தைகளை இறக்கி விட்ட பின், வாகனத்தை நிறுத்தி டீ குடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த குண்டுகுளத்தைச் சேர்ந்த கந்தவேல் மகன் கார்த்திக்(22), முஸ்டக்குறிச்சியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஜெயசூர்யா(22) மற்றும் வரதராஜன் உள்ளிட்ட 3 இளைஞர்களும் கோபித்துரையுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரும்பு கம்பியால் கோபித்துரையை தாக்கி, பள்ளி வாகனத்தின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இது தொடர்பாக கோபித்துரை அளித்த புகாரின் பேரில்.கமுதி போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திக் மற்றும் ஜெயசூர்யா ஆகிய இருவரை கைது செய்தனர்.
The post பள்ளி வாகனத்தின் கண்ணாடியை உடைத்த இரண்டு பேர் கைது appeared first on Dinakaran.