![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38169819-fdh.webp)
லக்னோ,
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விமானப்படை வோரர் மஞ்சுநாத். இவர் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள விமானப்படை தளத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மஞ்சுநாத் சக வீரர்கள் 12 பேருடன் நேற்று பாரசூட் பயிற்சியில் ஈடுபட்டார். விமானத்தில் இருந்து கீழே குதித்து பாரசூட் மூலம் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக மஞ்சுநாத்தின் பாராசூட் திறக்கவில்லை. இதனால், அவர் நடுவானில் இருந்து கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மஞ்சுநாத்தை மீட்ட வீரர்கள் விமானப்படை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மஞ்சுநாத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.