ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் மெட்சல்-மல்கஞ்கிரி மாவட்டம் பாலாநகர் மண்டல் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் ஆராதியா என்ற மாணவி 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், மாணவி ஆராதியா நேற்று வகுப்பறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தங்கள் மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஆராதியாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அதேவேளை, மதிப்பெண் குறைவாக எடுத்ததால் ஆசிரியரியர்கள் கண்டித்ததாகவும், இதனால் ஆராதியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.