பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 6 சிறுவர்கள் கைது

12 hours ago 1

மதுரை,

மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று, அந்த மாணவி, கடைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் தேடிச்சென்றுள்ளனர். அப்போது எதிரில் அழுதபடி சிறுமி வந்தாள். இதுகுறித்து அவளிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு அவள், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மதுரை நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 14 வயது சிறுமிக்கு, அவருடன் பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் உள்பட 6 சிறுவர்கள், தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த 6 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 8-ம் வகுப்பு மாணவிக்கு 6 சிறுவர்கள் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Read Entire Article