ஐ.பி.எல்.2025: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

4 hours ago 1

புதுடெல்லி,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் மட்டும் கேப்டனை அறிவிக்காமல் இருந்தது. கடந்த சீசனில் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், ஏலத்தில் லக்னோ அணிக்கு சென்று விட்டார். இதனால் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட விக்கெட் கீப்பரான லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கேப்டன்ஷிப்பை வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Axar PatelCaptain, Delhi Capitals ❤️ pic.twitter.com/S2qNuuBO7T

— Delhi Capitals (@DelhiCapitals) March 14, 2025
Read Entire Article