பள்ளி மாணவி பலாத்காரம் காதலன், 5 சிறுவர்கள் கைது

5 hours ago 2

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தற்போது 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 26ம் தேதி சிறுமி, தனது தாத்தாவுடன் அனந்தபுரத்தில் உள்ள வங்கிக்கு சென்ற போது மாயமானார். இது குறித்து அனந்தபுரம் போலீசில் அவரது தாத்தா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் அனந்தபுரம் நகரில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், நேற்று முன்தினம் மாணவியை அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரின் வீட்டில் இருந்து மீட்டனர். மாணவியிடம் நடத்திய விசாரணையில் 19 வயது இளைஞர் உள்பட 6 பேர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமி மாயமான வழக்கை போக்சோ வழக்காக மாற்றி செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது இளைஞர் அவரை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ள இருப்பதால் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரை காதலிப்பதற்கு முன் சில மாணவர்கள் தன்னுடன் நெருக்கமாக இருந்ததாக சிறுமி கூறியதன் பேரில் மேலும் 5 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பள்ளி மாணவி பலாத்காரம் காதலன், 5 சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article