பள்ளி நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

1 day ago 1

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள காஷிமிரா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, தினமும் பள்ளிக்கு நடந்தே சென்று வருவது வழக்கம். இதை நோட்டமிட்ட 40 வயது நபர் ஒருவர் தினமும் சிறுமியை பின்தொடர்ந்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, தனக்கு நடந்த கொடுமை பற்றி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாள்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர், மறுநாள் அந்த நபர் வரும் சாலையில் மறைந்திருந்து கண்காணித்து வந்தனர். அப்போது வழக்கம்போல் அந்த நபர் சிறுமியை பின்தொடர்ந்து வந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதைக்கண்டு ஆத்திரம் அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் குடும்பத்தினரிடம் இருந்து அந்த நபரை மீட்டு கைது செய்தனர். குடும்பத்தினர் அவரை தாக்கி நிர்வாணமாக்கி சாலையில் அழைத்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Read Entire Article