ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: ரவீந்திர ஜடேஜா புதிய வரலாற்று சாதனை

6 hours ago 2

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவீந்திர ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நம்பர் 1 இடத்தை அலங்கரித்து வருகிறார். தொடர்ச்சியாக 1,151 நாட்கள் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டராக உள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக நாட்கள் நம்பர் 1 ஆல் ரவுண்டராக இருந்த வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.

இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 3,370 ரன்களும், 323 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

Read Entire Article