பெரம்பலூர், டிச. 6: தமிழகஅரசின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தில் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த 148 மாணவிகளுக்கு கண்கண்ணாடி வழங்கப்பட்டது. தமிழக அரசின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கண்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை பாஸ்கா தலைமை வகித்தார். அம்மாபாளையம் முதன்மை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவப்பிரிவு கண் மருத்துவர் செந்தில் நாதன் தலைமை வகித்தார். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
கண்பரிசோதனை முகாமில், பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு கண்கள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறப்புநிலை கண் மருத்துவர் செந்தில்நாதன் தலைமையில் கலந்து கொண்ட மருத்துவ குழுவினர் நடத்திய பரிசோதனையில் கண் கண்ணாடி அணிய பரிந்துரைக்கப்பட்ட 148 மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் சிறப்பு கண் பயிற்சி ஆசிரியைகள் அமலி, மெர்லின் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தில் 148 மாணவிகளுக்கு கண்கண்ணாடி appeared first on Dinakaran.