பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை

3 hours ago 1

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டியில் உள்ள தனியார் பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து நீரஜ் என்ற 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். நேற்று மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

கட்டிடத்திலிருந்து இருந்து கீழே விழுந்த மாணவனை பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நீரஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி விசாரித்து வருவதாகவும், இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவனின் பெற்றோர் தங்கள் மகனின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி முதல்வரின் சித்தரவதைதான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

Read Entire Article