புதுக்கோட்டை, டிச. 5: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகைத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 217 கிராம் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நகைத் திருட்டு தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர், நமணசமுத்திரம், பனையப்பட்டி, அறந்தாங்கி, கே. புதுப்பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 6 இடங்களில் நடைபெற்ற நகைத் திருட்டில் ஈடுபட்ட, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த.
கலைதாஸ் (29), சண்முகம் (28), பன்னீர்செல்வம் (52), புதுக்கோட்டை பனையப்பட்டியைச் சேர்ந்த கோ. பாபு (40) ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 217 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பாராட்டினார்.
The post பல்வேறு பகுதிகளில் நகை திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது appeared first on Dinakaran.