சென்னை,
உயர்கல்வித்துறை சார்பில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள் பணிக்கு தாமதமாக வருவதையும், உரிய அதிகாரியிடம் அனுமதி பெறாமல் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழகங்கள் சுமுகமாக செயல்படும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் வருகையை உறுதி செய்வதற்காக பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதில் பல்கலைக்கழகத்துக்குள் நுழையும்போதும், பணி முடிந்து வெளியேறும் போதும் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.