பலோன் டி'ஆர் 2024 விருதை வென்றார் மான்செஸ்டர் சிட்டி மிட் பீல்டர் ரோட்ரி

2 months ago 13

பாரீஸ்,

கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதுகளில் ஒன்று பலோன் டி'ஆர் விருது. மெஸ்சி பார்சிலோனாவுக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிய காலத்தில் இருவரும்தான் இந்த விருதை மாறிமாறி வாங்கியிருப்பார்கள். அவர்கள் இருவருக்கிடையே கடும் போட்டி நிலவும். தற்போது மெஸ்சி அமெரிக்கா லீக்கில் விளையாடுகிறார். ரொனால்டோ சவுதி லீக்கில் விளையாடுகிறார்.

இந்த வருட விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் இருவருடைய பெயரும் இடம் பெறவில்லை. இந்த நிலையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார். 2023-24 சீசனில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார். தொடர்ந்து நான்காவது முறையாக மான்செஸ்டர் சிட்டி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

2024 யூரோ கோப்பையில் தனது நாடான ஸ்பெயின் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 2008-ல் மான்செஸ்ட் யுனைடெட் அணிக்காக பலோன் டி'ஆர் விருதை வென்ற பிறகு இங்கிலீஷ் பிரீமியரில் விளையாடும் ஒரு வீரர் பலோன் டி'ஆர் விருதை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Read Entire Article