பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் பரோடாவில் ஆபீஸ் அசிஸ்டென்ட் (பியூன்) பணிக்கு 10ம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஆபீஸ் அசிஸ்டென்ட் (பியூன்):
மொத்த இடங்கள்: 500.
வயது வரம்பு: 01.05.2025 தேதியின்படி 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் நன்றாக எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பொது அறிவு, அடிப்படை அரித்மெடிக், சைக்கோ மெட்ரிக் டெஸ்ட், பொது ஆங்கிலம் ஆகிய பாடங்களிலிருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
சென்னை, மதுரை, திருச்சி, விருதுநகர், வேலூர், நெல்லை ஆகிய மையங்களில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 6 மாதம் பயிற்சியும், பின்னர் மாதம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை சம்பளம் வழங்கப்படும்.கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.600/-. மாற்றுத்திறனாளிகள்/எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு கட்டணம் ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.bankofbaroda.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.05.2025.
The post பரோடா வங்கியில் 500 இடங்கள் appeared first on Dinakaran.