தேவையானவை:
பருத்தி விதை- 1 கப்,
பச்சரிசி- 1/4 கப்,
வெல்லம்- 3/4 கப்,
ஏலக்காய் தூள்- 1/2 ஸ்பூன்,
தேங்காய்- 1/2 மூடி,
சுக்குப்பொடி- 1 சிட்டிகை.
செய்முறை:
முதலில் பருத்தி விதையை கழுவி 12 மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பின் அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பருத்தி விதையை ஒரு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய சக்கையில் மேலும் தண்ணீர் சேர்த்து அரைத்து மீண்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். ஊறவைத்த அரிசியையும் தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் வடிகட்டிய பருத்திப்பால் மற்றும் அரைத்த அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் அடுப்பில் கைவிடாமல் கிண்ட வேண்டும். இது நன்கு கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அதில் வெல்லம் சேர்த்து கரையும் வரை கிளறவும். இறுதியாக ஏலக்காய் தூள், சுக்குப்பொடி சேர்த்து இறக்கினால் ஆரோக்கியமான பருத்திப்பால் தயார்.
The post பருத்திப்பால் appeared first on Dinakaran.