சென்னை: தமிழக அரசு 13 மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்கமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, சென்னை, புறநகர் மாவட்டங்களில் நடைபெற உள்ள களஆய்வு பணிகள் குறித்து, மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 13 மணல் குவாரிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. குவாரி மூலம் ஆதாயம் பெற வேண்டும், ஊழல் செய்ய வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கமாக உள்ளது.