பராமரிப்பு இல்லாத இந்திரா காந்தி விளையாட்டு மைதானம்: புதுச்சேரி அரசு ஆடுகளத்துக்கு புத்துயிர் அளிக்கக் கோரிக்கை

2 weeks ago 2

புதுச்சேரி: புதுச்சேரியில் போதிய பராமரிப்பின்றி காணப்படும் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்துக்கு அரசு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. புதுச்சேரி மாநிலம் உப்பளத்தில் கடந்த 1992 ஆண்டு இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. 400 மீட்டர் சுற்றளவுள்ள ஓடுபாதை புல்வெளி மைதானம் , வீரர்கள் தங்குமிடம், பார்வையாளர்கள் மாடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. கால் பந்து, ஹாக்கி, கைப்பந்து உள்ளிட்ட மைதானங்களும் உருவாக்கப்பட்டன. இதனால் தொடக்கத்தில் ஏராளமான வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு பதக்கங்களை குவித்தனர். ஆனால் காலப்போக்கில் பராமரிப்பின்றி விளையாட்டு மைதானம் சேதமடைந்தது.

விளையாட்டு மைதானத்தில் பிரதமர் அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகளை கடந்தும் சிந்தடிக் டிராக் எனப்படும் செயற்கை ஓடுபாதை பயன்பாட்டுக்கு வராததால் பயிற்சி பெரும் வீரர்கள் பாதிப்படைந்துள்ளனர். மைதானம் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே மைதானத்தை சீரமைத்து பல கோடி மதிப்பிலான சிந்தடிக் ஓடுதளத்தை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாக உப்பளம் இந்திரா காந்தி மைதானத்தை பார்வையிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் மூலம் மைதானத்துக்கு புத்துயிர் அளித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

The post பராமரிப்பு இல்லாத இந்திரா காந்தி விளையாட்டு மைதானம்: புதுச்சேரி அரசு ஆடுகளத்துக்கு புத்துயிர் அளிக்கக் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article