
சென்னை,
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே 23' படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் SK23 திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகவுள்ளது. மேலும் அவருக்கு ரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்கரா சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதாவது பராசக்தி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு, அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹீரோ! சிவகார்த்திகேயன். உங்களுடன் இணைந்து பணிபுரிவதில் முழுமையான மகிழ்ச்சி" என்று அதில் தெரிவித்துள்ளார்.