'தனி ஒருவன் 2' படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் மோகன்ராஜா

3 hours ago 2

சென்னை,

மோகன்ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'தனி ஒருவன்'. இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமான 'தனி ஒருவன் 2' படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை 2023-ல் வெளியிட்டது. ஆனால் அதற்கு பின்னர் தனி ஒருவன் 2 தொடர்பான எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், சமீபத்திய விழா ஒன்றில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குனர் மோகன் ராஜா இருவரும் கலந்துகொண்டனர். அப்போது 'தனி ஒருவன் 2' படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது இயக்குனர் மோகன் ராஜா படம் குறித்த அப்டேட் பகிர்ந்தார்.

அதாவது, "தனி ஒருவன் 2 படத்தின் மீது அவ்வளவு காதலை கொண்டுள்ளவர்களுக்கு நன்றி. எங்களுக்கு அது மிகவும் ஸ்பெஷலான படம். எப்போதும் தயாரிப்பாளர் அர்ச்சனா அவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார், எங்களுடைய பெருமைக்குரிய படம் அது என்று. படத்திற்கான எல்லாமே தயாராக இருக்கு. தயாரிப்பு நிறுவனம் சரியான நேரம் சொல்கிறோம் என என்னிடம் கூறியுள்ளனர். ஆகையால் அதற்கான சரியான நேரத்தை பார்த்து படத்தை துவங்கவிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

 

Read Entire Article