
திருச்சி,
விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிதான் கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஜனாதிபதியை பாஜக அரசு செயல்பட வைக்கிறது."
இவ்வாறு அவர் பேசினார்.