பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

2 hours ago 1

பாலக்காடு : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா முதலமடா கிராமப்பஞ்சாயத்திற்கு உட்பட்ட பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தைச் சுற்றிப்பார்க்க சுற்றுலாப் பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கேரள, தமிழக சுற்றுலாப்பயணிகள் பொள்ளாச்சி, ஆனைமலை, சேத்துமடை மற்றும் டாப்சில்ப் வழியாக பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்கு வருகின்றனர்.

சொந்த வாகனங்களில் வருகிற சுற்றுலா பயணிகள் ஆனைப்பாடி வரையில் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கப்படுகின்றனர்.

அங்கிருந்து பரம்பிக்குளம் அணை பகுதிக்கு செல்ல வனத்துறையினரின் வாகனங்களில் மட்டுமே பயணிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வனத்துறையினர் வாகனங்களில் பயணிப்போருக்கு தலா 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகின்றனர்.

வனத்துறையினர் வாகனங்களில் சென்றால் துணக்கடவு அணை, கன்னிமாரா தேக்கு மரம், மூங்கில் படகுசவாரி படகு இல்லம், நீர்வீழ்ச்சிகள், சாலக்குடி நதியின் உற்பத்தி, வனவிலங்குகள் நடமாட்டம் ஆகிய உட்பட இயற்கை சூழ்ந்த தேக்குமரக்ட்டை பார்த்து ரசிக்கமுடிகிறது.பரம்பிக்குளத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் வகின்றனர்.

இவர்கள் காடுகளில் சேகரிக்கக்கூடிய தேன், மூங்கில் அரிசி, அணைகளில் மீன்பிடித்தல், கைவினைப்பொருட்கள் தயாரித்தல், காகித பைகள் தயாரித்தல், சோப்பு தயாரித்தல் ஆகிய தொழில்களில் கிடைக்கக்கூடிய வருவாய் வைத்து தங்களது வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

இங்குள்ள கேண்டீன்களை ஆதிவாசி மலைவாழ் மக்களே நடத்தி வருகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வகையான சாப்பாடுகளும் தயார்படுத்தி சுற்றுலா பயணிகளின் வழங்கி அவர்களின் பாராட்டுகளை பெற்றவண்ணம் உள்ளனர்.

ஆனைப்பாடியில் கேரள வனத்துறையினரின் குடிசை வீடுகள், டோர்மெட்டரி, பரல் வீடுகள் ஆகியவை சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான வசதிகள் உள்ளது.

ஆனப்பாடியிலிருந்து பரம்பிக்குளம் அணைப்பகுதி வரையிலாக செல்கின்ற வனப்பாதையில் இருபுறங்களிலாக காட்டு யானைகள், கரடி, காட்டு மாடுகள், புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள், மயில்கள், முயல், கலைமான், குள்ளநரிகள் ஆகியவை பார்த்து ரசிக்க முடிகின்றது. பரம்பிக்குளம் அணையில் மூன்று கி.மீட்டர் அளவிற்கு மூங்கில் படகுசாவாரி செய்வதற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

The post பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article