பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

4 months ago 13

 

பரமக்குடி, ஜன. 10: பரமக்குடி நகராட்சிக்கு அருகில் உள்ள வேந்தோணி, உரப்புளி, தெளிசாத்தநல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளின் ஒரு சில பகுதிகளை நகராட்சியுடன் இணைப்பதற்கு சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எஸ்.அண்டகுடி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களுடைய பகுதிகளை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், வேந்தோணி ஊராட்சிக்குட்பட்ட மரக்காயர்பட்டணம், உலகநாதபுரம், சரஸ்வதி நகர், வேந்தோணி ஐந்தாவது வார்டு ஆகிய பகுதிகளை பரமக்குடி நகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேந்தோணி ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் பரமக்குடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

The post பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Read Entire Article