'பரந்தூர் விமான நிலையம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமையும்' - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

1 month ago 7

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில் உள்ள சிப்காட்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பரந்தூர் விமான நிலைய பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு வெகு விரைவில் விமான நிலையம் அமைய இருப்பதாகவும் தெரிவித்தார். கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான நடைமுறைகளை மாநில அரசு முடித்துவிட்டதாகவும், மத்திய அரசிடம் இருந்து பதில் வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Read Entire Article