
வொர்செஸ்டர்,
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
இந்தியா: ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, ராகுல் குமார், ஹர்வன்ஷ் பங்கலியா, கனிஷ்க் சவுகான், ஆர்எஸ் அம்ப்ரிஷ், தீபேஷ் தேவேந்திரன், அன்மோல்ஜீத் சிங், யுதாஜித் குஹா, நமன் புஷ்பக்
இங்கிலாந்து: பென் டாக்கின்ஸ், ஜோசப் மூர்ஸ், பென் மேயஸ், ராக்கி பிளின்டாப், தாமஸ் ரெவ் (கேப்டன்), ஏகான்ஷ் சிங், செபாஸ்டியன் மோர்கன், ரால்பி ஆல்பர்ட், அலெக்ஸ் கிரீன், மேத்யூ பிர்பேங்க், ஏஎம் பிரஞ்சு