பரங்கி விதை அல்வா

1 hour ago 2

தேவையானவை:

தோல்நீக்கிய பரங்கி விதை (டிபார்ட் மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும்) – 100 கிராம்,
நிலக்கடலை வறுத்தது – 50,
கருப்பட்டி (அ) பனங்கற்கண்டு – 200 கிராம்,
உருக்கிய நெய் – 100 கிராம்,
ஏலத்தூள், உப்பு – சிட்டிகை,
குங்குமப்பூ இதழ் – 4 (சூடான பாலில் கரைக்கவும்),
சர்க்கரை இல்லாத பால் கோவா – 50 கிராம்,
வறுத்த முந்திரி, திராட்சை – தலா 10,
பால் – 100 மிலி.

செய்முறை:

பரங்கி விதை, நிலக்கடலையை சூடான பாலில் ஒரு மணி நேரம் ஊறவிட்டு, மைய அரைக்கவும். வாணலியில் நெய் சிறிது விட்டு, அரைத்த கலவையை சற்று பச்சை வாசனை போக வதக்கி பனங்கற்கண்டு (அ) வெல்லம் சேர்த்து கிளறி ஒட்டாமல் வரும் போது பால்கோவா உதிர்த்து சேர்க்கவும். நன்கு சுருண்டு வருகையில் மீதம் உள்ள நெய் சேர்த்து கரைத்த குங்குமப்பூ, ஏலப்பொடி, சிட்டிகை உப்பு, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து அல்வா பதத்தில் இறக்கவும்.

 

The post பரங்கி விதை அல்வா appeared first on Dinakaran.

Read Entire Article