திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 72,937 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.4.79 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்று 8 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். பள்ளிகளில் பொது தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த சில நாட்களாக அதிகளவு பக்தர்கள் வந்தனர்.
இதனால் 18 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் தங்கும் அறைக்கு செல்வதற்கே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தற்போது வெயில் அதிகமாக ெகாளுத்துவதால் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல் பக்தர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் திருமலைக்கு பக்தர்களின் வருகை நேற்றும் இன்றும் சற்று குறைந்துள்ளது. இதனால் இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள ஒரு அறையில் மட்டுமே பக்தர்கள் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று 72,937 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 24,157 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று மாலை கணக்கிடப்பட்டது. அதில் ரூ.4.79 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
The post 8 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.