பயணிகள் கவனத்திற்கு.. காரைக்குடி, கல்லிடைகுறிச்சியில் நின்று செல்லும் ரெயில்கள் தெரியுமா?

2 hours ago 2

சென்னை,


சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்ணாடத்திலும், தூத்துக்குடி - பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் கல்லிடைகுறிச்சியிலும்  ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக,தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 12605/12606) வரும் 15-ந் தேதி முதல் கூடுதலாக பெண்ணாடம் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் (காலை 8.27, இரவு 7.01 மணி) பரிசார்த்த முறையில் நின்று செல்லும்.

இதேபோல், தூத்துக்குடி - பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் (16791/16792) வரும் 15-ந் தேதி முதல் கூடுதலாக கல்லிடைகுறிச்சி ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் (இரவு 11.21, மாலை 3.45 மணி) பரிசார்த்த முறையில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Read Entire Article