பயணிகளின் தேவையை கருதி 27 எக்ஸ்பிரஸ் ரயில்களில் 56 பொதுப்பெட்டிகள் இணைக்க தெற்கு ரயில்வே திட்டம்

1 month ago 4

சென்னை: 27 எக்ஸ்பிரஸ் ரயில்களில் 56 பொதுப்பெட்டிகள் இணைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தெற்கு ரெயல்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, பயணிகளின் தேவையை கருதி இந்த மாத இறுதிக்குள் 370 ரயில்களில் ஆயிரம் முன்பதிவில்லா பெட்டிகளை புதிதாக இணைக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதில், தெற்கு ரயில்வேயில் 51 எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொதுப்பெட்டிகளை இணைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில், 24 எக்ஸ்பிரஸ் ரயில்களில் இதுவரை 79 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

சென்னை சென்டிரல்-புதுடெல்லி, மங்களூர்-போடிநாயக்கனூர், சென்னை எழும்பூர்-தூத்துக்குடி, கன்னியாகுமரி-ஹவுரா வழித்தடங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், வழக்கத்தை விட 7 ஆயிரத்து 900 பேர் பயணிக்கும் வகையில் இருக்கை வசதி அதிகரித்துள்ளது. மேலும், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் மேலும் 27 எக்ஸ்பிரஸ் ரயில்களில் 56 பொதுப்பெட்டிகள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 5 ஆயிரத்து 600 இருக்கைகள் அதிகரிக்கும். இதேபோல, நாடு முழுவதும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் புதிதாக 583 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு 647 ரயில்களில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பயணிகளின் தேவையை கருதி 27 எக்ஸ்பிரஸ் ரயில்களில் 56 பொதுப்பெட்டிகள் இணைக்க தெற்கு ரயில்வே திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article