
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அனந்த்நாக் மாவட்ட காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.