பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் - திருமாவளவன்

3 hours ago 2

சென்னை,

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காஷ்மீரில் நடந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது என்பதைத்தான் இச்சம்பவம் உறுதிபடுத்துகிறது.

அங்கு பயங்கரவாதமே இல்லை.. சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாகப் பயணிக்கலாம் என்ற பா.ஜ.க. அரசின் கூற்றை நம்பிச் சென்றவர்கள் இன்று படுகொலையாகி உள்ளனர். எனவே, தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று திருமாவளவன் கூறினார்.

Read Entire Article