தேவையான பொருட்கள்
3 டீஸ்பூன் எண்ணெய்
5 சின்ன வெங்காயம்
1 வெங்காயம்
4 பூண்டு
1 தக்காளி
1 டீஸ்பூன் மல்லி
1 டீஸ்பூன் மிளகு
1 டீஸ்பூன் சீரகம்
1 காய்ந்த மிளகாய்
5 பூண்டு
1 கப் பன்னீர்
1/2 டீஸ்பூன் உப்பு
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை:
பன்னீர் சதுர வடிவில் வெட்டி வைத்து கொள்ளவும். கடாயில் மல்லி,மிளகு,சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து அரைத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம்,பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்னர் அரைத்த மசாலா மற்றும் பொடி,மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.இப்போது பன்னீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.சுவையான பன்னீர் மசாலா தயார்.
The post பன்னீர் மசாலா appeared first on Dinakaran.