நீலகிரி : “2026 மட்டுமல்ல 2031, 36 என எல்லாமே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான்”என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உதகையில் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில், உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிக முக்கியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தும் விதமாக உதகை மலைப்பகுதி மேம்பாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உதகையில் 5 நாள் பயணம் மிக எழுச்சியாக இருந்தது. திராவிட மாடல் அரசு மீது மக்கள் காட்டும் ஆதரவை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.ஆளுநர் விவகாரத்தில் ஒன்றிய அரசு சர்வாதிகாரமாகசெயல்படுகிறது. ஆளுநர் வழக்கு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டது தொடர்பாக நேற்றே அறிக்கை வெளியிட்டேன், மற்ற மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து, கருத்துகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்போம்.திராவிட மாடல் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கும். 2026 மட்டுமல்ல 2031, 36 என எல்லாமே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post “2026 மட்டுமல்ல 2031, 36 என எல்லாமே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான்” : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.