பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

3 hours ago 2

ராம​நாத​புரம்: பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராம​நாத​புரம் மாவட்​டம், முதுகுளத்​தூர் அருகே ஆண்​ட​நாயகபுரத்​தில் 1935-ம் ஆண்டு பிறந்த சேது​ராமன், சென்னை பல்​கலைக்​கழகத்​தில் முனை​வர் பட்​டம் பெற்​றார். விரு​கம்​பாக்​கம் சின்​மயா நகரில் குடும்​பத்​துடன் வசித்து வந்​தார். அவருக்கு மகன்​கள் திரு​வள்ளுவர், க​வியரசன், ஆண்​டவர், தமிழ் மணி​கண்​டன், மகள் பூங்​கொடி உள்​ளனர். நெஞ்​சத்​தோட்​டம், ஐயப்​பன் பாமாலை, தமிழ் முழக்​கம், தாய்​மண், சேது காப்​பி​யம் உட்பட ஏராள​மான நூல்​களை எழு​தி​யுள்​ளார்.

ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட கவிதைகளை பதிப்​பித்​துள்​ளார். பன்​னாட்டு தமிழுறவு மன்​றத்​தின் நிறு​வன​ராக இருந்த இவருக்​கு, பெருங்​கவிக்​கோ, செந்​தமிழ்க் கவிமணி போன்ற பட்​டங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. திரு​வள்​ளுவர் விருது, கலை​மாமணி விருது, சி.​பா.ஆ​தித்​த​னார் மூத்த தமிழறிஞர் விருது உள்​ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்​றுள்​ளார். இதனிடையே மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் உடல்நலக் குறைவால் கடந்த 4ம் தேதி சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அவரது சொந்த ஊரில் அவரது மனைவியின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வா.மு.சேதுராமன் உடலுக்கு அமைச்சர் பெரிய கருப்பன், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

The post பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது appeared first on Dinakaran.

Read Entire Article