நன்றி குங்குமம் தோழி
* கேரட்டில் கரோட்டின், வைட்டமின் ‘ஏ’ சத்தும் அதிகம். வைட்டமின் பி, சி, டி, ஈ, கே, கால்சியம் பெக்டேட் சத்துகள் அதிகம் உள்ளதால் இது பனிக் காலத்தில் நோய் ஏற்படுவதை தடுக்கிறது.
* டர்னிப்பில் போலேட் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம்.
* பாலக்கீரையில் ப்ளேவனாய்டுகள் அதிகமிருப்பதால், இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் பனிக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கிறது.
*வெந்தயக் கீரையில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், நார்ச்சத்துகள் அதிகம். இது உடலின் கொழுப்புச் சத்தைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
*முள்ளங்கியில் பொட்டாசியம், போலிக் அமிலம் அதிகம். பனிக்காலத்தில் முள்ளங்கி சாம்பார் அதிகம் சேர்த்துக் கொள்வது உடலுக்கு ஏற்றது.
* பனிக்காலத்தில் ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது. நொறுக்குத் தீனிக்கு பதிலாக ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு உற்சாகம் தரும்.
பனிக்கால ஆரோக்கிய டிப்ஸ்!
* பனிக்காலத்தில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் சேர்ப்பதும் மிக முக்கியம். முடி உதிர்வு மற்றும் கூந்தல் பொலிவிழப்பதைத் தடுக்க கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். பார்லி கஞ்சியும் பனிக்காலத்துக்கு சிறந்தது.
* தண்டுக் கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் சீரகம், சின்ன வெங்காயம், 2 பல் பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து
சூப் செய்து, மாலை நேரத்தில் குடிப்பது பனிக்காலத்தில் மிகவும் நல்லது.
* பனிக்காலத்தில் எண்ணெய் மற்றும் நீர்ப்பசையுள்ள சோப்புகளை உபயோகிக்கலாம். வாசலின், லோஷன் போன்றவற்றை தடவுவதால் தோலுக்கு நீண்ட நேரம் ஈரப்பதம் கிடைக்கும்.
* பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால் வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் அதில் பாதங்களை ஊறவைத்து, பின் ஸ்கிரப்பர் கொண்டு தேய்த்தால் அழுக்குகள் வெளியேறும்.
*பனிக்காலத்தில் சளி, மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் இவை ஏற்படும். துளசி டீ, இஞ்சி டீ, புதினா டீ, சுக்கு மல்லி டீ இவைகளை பருகுவது நல்லது.
* நீரை கொதிக்க வைத்து 1 டீஸ்பூன் மிளகு அல்லது லவங்கம் சேர்த்து குடிக்கலாம். காலையில் எழுந்து மூச்சுப் பயிற்சி செய்து துளசி, மிளகு, வெற்றிலை மற்றும் தேன் சேர்த்த பானத்தை அருந்தினால் மூச்சுப்பாதை சீராகி கோழையினால் ஏற்படும் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.
தொகுப்பு: அபர்ணா சுப்ரமணியம், சென்னை.
The post பனிக்காலத்தின் ஊட்டச்சத்து உணவுகள்! appeared first on Dinakaran.