பனாமாவில் ஓட்டல் மாடியில் இருந்து தவறி விழுந்த அமெரிக்க வாழ் இந்திய மாணவன் உயிரிழப்பு

2 hours ago 2

நாசாவ்,

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கவ்ரவ் ஜெய்சிங் (வயது 25) அமெரிக்காவில் உள்ள பெண்ட்லி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார்.

இந்நிலையில், கல்வி இறுதியாண்டு நிறைவடைந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் பனாமா நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதில், கவ்ரவ் ஜெய்சிங்கும் சென்றுள்ளார்.

பனாமாவின் கசினோவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைவரும் தங்கியுள்ளனர். கடந்த 11ம் தேதி இரவு ஓட்டலின் மாடியில் நின்றுகொண்டிருந்த கவ்ரவ் ஜெய்சிங் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கவ்ரவ் ஜெய்சிங்கை மீட்ட சக மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தினர். அங்கு ஜெய்சிங்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Read Entire Article