சிவகங்கை, மே 16: பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பன்முக திறமைக்கான விருதான பத்ம விருது குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது. அதன்படி கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவர்களுக்கு, வருகின்ற 26.01.2026 அன்று குடியரசு தின விழாவில், மாநில அளவில் விருது வழங்கப்பட உள்ளது. https://awards.gov.in என்ற இணையதளத்தில் விருதிற்கான விண்ணப்பங்களை 10.06.2025ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள், இணையதளத்தில் விண்ணப்பித்து, அதன் விபரத்தினை மாவட்ட சமூக நல அலுவலர், கலெக்டர் அலுவலக, சிவகங்கை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பத்ம விருதுக்கு விண்ணப்பம் appeared first on Dinakaran.