பத்ம விருது பெற்றவர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து

2 weeks ago 7

சென்னை,

கலை, அறிவியல், இலக்கியம், வர்த்தகம், மருத்துவம், சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்தவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்காக பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

பத்ம விபூஷன் விருதுகள் 7 பேருக்கும், பத்மபூஷன் விருதுகள் 19 பேருக்கும், பத்மஸ்ரீ விருதுகள் 113 பேருக்குமாக மொத்தம் 139 விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதும், கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமையல் நிபுணர் செப் தாமு உள்ளிட்ட 10 பேருக்கும் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருது பெற்றவர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கல்வி, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், சமூகப் பணி, வர்த்தகம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், பத்திரிகையாளர் லட்சுமிபதி ராமசுப்பையர், சமையல் கலைஞர் செப் தாமு, ஸ்தபதி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article