
சென்னை,
சென்னையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"சாதிவாரி கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு முன்னாலேயே நடத்தப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தப் போகிறோம் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு பாராட்டுகளும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த பிழைக்கும் இடமின்றி சாதிவாரி கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும். பதவிக்காக கணக்கு போட்டுக்கொண்டு தி.மு.க.வுடன் ம.தி.மு.க. கூட்டணி அமைக்கவில்லை. எனவே எந்த சூழ்நிலையிலும் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க தொடர்ந்து ஈடுபடும்."
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.