பிரதமரின் கிசான் திட்டம்; போலியான செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்-தமிழக அரசு

3 hours ago 3

சென்னை,

பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தில் பதிவு செய்யுங்கள் என்ற பெயரில் ஒரு செயலியை குறிப்பிட்டு வாட்ஸ்அப்பில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த போலியான செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பிரதமரின் கிசான் திட்டத்தில் இணைய pmkisan.gov.in என்ற இணையதளம் அல்லது தேசிய தகவல் மையம் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ள 'PMKISAN Gol' என்ற செயலியைக் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பதிவு செய்யலாம். வாட்ஸ் அப்பில் பகிரப்படும் 'APK' செயலி போலியானது. அதைப் பதிவிறக்கம் செய்பவர்களின் கைப்பேசி முடக்கம் ('ஹேக்') செய்யப்பட்டு வங்கி கணக்கில் உள்ள பணம் மற்றும் தகவல் திருடப்படும் அபாயம் உள்ளது'இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Read Entire Article