பண்ருட்டி: கோயில் திருப்பணியின்போது பூமிக்கு அடியில் இருந்து 2 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகையில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த ஆதிகுணபரீஸ்வரர் கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் மிகவும் சிதலமடைந்து காணப்பட்டதால் ₹50 லட்சத்தில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு கோயிலை முழுவதுமாக அகற்றிவிட்டு, புதிதாகவே கட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலில் மதில் சுற்று அஸ்திவாரம் அமைப்பதற்காக நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்தது.
அப்போது தரை மட்டத்தில் இருந்து கீழே 6 அடி ஆழத்தில் சுமார் நாலரை அடி உயரம் உள்ள பீடத்துடன் கூடிய விஷ்ணு துர்க்கை, ஒன்றரை அடி உயரம் சண்டிகேஸ்வரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அறநிலையத்துறை அலுவலர்கள் சென்று சிலைகளை பார்வையிட்டனர். கண்டெடுக்கப்பட்ட கற் சிலைகளின் மதிப்பு, செய்யப்பட்ட காலம் ஆகியவை குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்று அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
The post பண்ருட்டி அருகே கோயில் திருப்பணியின்போது 2 கற்சிலைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.